கேள்விகளை கேட்டு பகுத்தறிவை விதைத்தார்; யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்: பெரியார் பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி பதிவு
சென்னை: 'கேள்விகளை கேட்டு பகுத்தறிவை விதைத்தார். உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார். சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்; யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார். அதனாலே அவர் நம் பெரியார் என்றானார். பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026ல் அமைத்திட உறுதியேற்போம். வாழ்க பெரியாரின் புகழ்' என தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement