பெரம்பலூர் அருகே மரத்தில் கார் மோதி சென்னை டாக்டர், மகள், மாமனார் பலி: மனைவி படுகாயம்
Advertisement
நேற்று காலை 7.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, பெருமாள்பாளையம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் குழந்தை கவிகா, பாலபிரபு, அவரது மாமனார் கந்தசாமி ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண் டாக்டர் கவுரி படுகாயமடைந்தார். இவர்களுடன் அழைத்து செல்லப்பட்ட நாய் குட்டிக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement