மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் நடத்துகிறது : திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், "திமுக எடுத்து வைத்துள்ள கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கணக்கீட்டு படிவத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்பதில் மக்களிடையே பெரும் குழப்பம் உள்ளது. திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பொதுமக்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்ய உதவி வருகின்றன."இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement