மக்கள் போராட்டம் இந்தோனேசிய அமைச்சர்கள் 5 பேர் நீக்கம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. அங்கு மக்களின் சராசரி வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17 ஆயிரமாக உள்ளது. அங்கு உள்ள எம்பிக்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.
சமீபத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தப் போராட்டம் தொடங்கியது. இந்தோனேசிய நாடாளுமன்றத்த முற்றுகையிட்ட பொது மக்கள், எம்பி.க்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின் போது அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பு என வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து எம்பிக்களின் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்களை தொடர்ந்து, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தனது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்துள்ளார். நிதியமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர்.