மக்கள் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்
அதன்படி காளிதாஸ் மார்க்கில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் யோகி ஆதித்ய நாத், “ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் அரசு அதிகாரிகள் கலந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டு, அதனை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் பிரச்னைகளை தீர்ப்பதுதான் அரசின் முன்னுரிமை. எனவே பொதுமக்கள் தொடர்பான பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், “எந்த பணியையும் புறக்கணிப்பதையும், அதில் அலட்சியம் காட்டுவதையும் சகித்துக் கொள்ள முடியாது. பிரச்னைகளுக்கு தீர்வு காணாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.