மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை அபயம் வழங்கும் திட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.5.08 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால்கள், சிறு மற்றும் குறுந்தொழில் புரியும் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.23 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவியை கலெக்டர் வழங்கினார்.
இந்த குறைதீர் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வேலாயுதம், உதவி ஆணையர் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.