மக்களும், அரசு துறையும் விழிப்புணர்வோடு செயல்பட விக்கிரமராஜா வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: கரூரில் 40பேர் பலியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழப்பின் பொறுப்பை சுமப்பது யார் என்கிற கேள்வி எழுகிறது. எப்படி இந்த இழப்பை ஈடு செய்வோம் என விடை தெரியா கேள்விகளும் எழும்பவே செய்கின்றன.
Advertisement
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இத்துயர சம்பவத்திற்கு வேதனை நிறைந்த கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்துவதோடு உயிரிழந்த குடும்பத்தினருக்கு மன வலிமையையும் ஆறுதலையும் பெற இறைவனை வேண்டுகிறோம். மீண்டும் இதுபோன்ற நெஞ்சை நொறுக்கும் துயர சம்பவங்கள் நிகழா வண்ணம் பொதுமக்களும், அரசு துறையும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுகிறோம்.
Advertisement