போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான வழக்கில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் அதிரடி கைது
சுமார் 3 மணி அளவில் கல்யாணிநகர் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மற்றொரு கார் மீது விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டிய 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவருக்கு 16 மணி நேரத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் அந்த சிறுவன் பாரில் மது அருந்தும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியானது. சிசிடிவி காட்சியை ஆதரமாக கொண்டு மது பான பார் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேர் மீதும், கார் ஓட்டிய சிறுவனின் தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். சிறுவனுக்கு மதுபானம் சப்ளை செய்த பார் சீல் வைக்கப்பட்டது.