கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து மயங்கி விழும் மக்கள்
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 10கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். விஜய் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த பெண் உடனடியாக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் முன்கூட்டியே பிரசாத்தை முடித்தார் விஜய்
நாமக்கல்லில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பிரசாரம் செய்த இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் வணிகர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், சனிக்கிழமைகள் தோறும் பிரசாரம் செய்துவருகிறார். அந்த வகையில் நாமக்கல்லில் இன்று பிரசாரம் செய்தார்.
நாமக்கல்-சேலம் ரோடு கேஎஸ் தியேட்டர் மெயின் ரோடு பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறையினர் 20 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதியம் நாமக்கல் புறப்பட்டார். விஜய் வருகையையொட்டி காலை முதலே நாமக்கல்-சேலம் ரோட்டில் கட்சியினர் திரண்டு இருந்தனர்.
நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள கேஎஸ் தியேட்டர் அருகே விஜய் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். விஜய் பிரசாரத்தையொட்டி நாமக்கல்- சேலம் ரோட்டில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
பஸ் ஸ்டாண்ட் பிரதான ரோடு, பரமத்திரோடு ஆகிய பகுதிகளிலும் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பிரசாரம் மேற்கொண்ட சேலம் ரோட்டில் ஏரளாமான ஜவுளி கடைகள், ஓட்டல்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளன. அவை அனைத்தும் இன்று அடைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாமக்கல் பிரசாத்தை முடித்துக்கொண்டு கரூர் சென்றடைந்தார் அங்கு அவரை காண ஆயிரக்கணக்கானோர் காத்து கிடந்தனர். விஜய் வந்து பேசிய போது ஒரு பெண் மயங்கி விழுந்தார் . அவரை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து கூட்ட நெரிசல் காரணமாக அடுத்தடுத்து மயங்கி விழுந்த நிலையில் விஜய் பிரசாத்தை உடனடியாக முடித்து கொண்டார்.