தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இறந்தவர் உடலை தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற மக்கள்

*சாலை வசதியின்றி தவிக்கும் மலைவாழ் கிராமங்கள்
Advertisement

உடுமலை : மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு தளிஞ்சி, ஈசல்திட்டு, பொறுப்பாறு, ஆட்டுமலை உள்ளிட்ட 18 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தேன் எடுத்தல், தைலம் காய்ச்சுதல் உள்ளிட்ட வனம் சார்ந்த தொழில்கள் மட்டுமல்லாமல், விவசாயப் பணிகளும் மேற்கொண்டு வருகிறார்கள். தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கு சமவெளிப்பகுதிகளுக்கு வந்துசெல்லும் நிலை உள்ளது. சாலை வசதி இல்லாமல், வன விலங்குகள் நடமாட்டத்துக்கு மத்தியில் தினசரி உயிரைப் பணயம் வைத்து மலை மீது ஏறி, இறங்கி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் உயிருக்கான போராட்டமும் இங்கு தொடர்கிறது. நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு, தொட்டில் கட்டி தூக்கி வரும் அவல நிலை உள்ளது. இதனால் மலைவாழ் குடியிருப்புகளுக்கு சாலை வசதி அமைத்துத்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈசல் திட்டு மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மணியன் (52) என்பவர், நோய் பாதிப்பு ஏற்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

அதனையடுத்து அவரது இறுதிச் சடங்குகளை சொந்த பூமியில் மேற்கொள்ள விரும்பிய மலைவாழ் மக்கள், உடலை தொட்டில்கட்டி ஈசல்திட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த பகுதியில் மருத்துவம் மற்றும் கல்வி தேவைக்காக சாலை வசதி அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாததால், தற்போது வரை தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

Advertisement