பென்ஷன் கேட்டு ஜெகதீப் தன்கர் மனு
ஜெய்பூர்: முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளிவரவில்லை. இந்த நிலையில் ஜெகதீப் தன்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கடந்த 1993ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இதற்கான ஓய்வூதியத்தை தனக்கு மீண்டும் வழங்க கோரி ராஜஸ்தான் மாநில அரசிடம் விண்ணப்பித்துள்ளார். தற்போது 74 வயதாகும் ஜகதீப் தன்கருக்கு மாதம் ரூ.42,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement