பெகாசஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதிப்பு..!!
சர்ச்சைக்குரிய பெகாசஸ் மென்பொருள் தயாரிப்பாளரான என்.எஸ்.ஓ. நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெள்ளி அன்று அமெரிக்க நீதிமன்றம், என்.எஸ்.ஓ. நிறுவனத்துக்கு நிரந்தர தடை உத்தரவை பிறப்பித்தது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. வாட்ஸ் ஆப் போன்ற தகவல் பரிமாற்ற சேவைகளில் ஊடுருவும் என்.எஸ்.ஓ.வின் முயற்சிகளுகக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது. என்.எஸ்.ஓ. நிறுவனத்துக்கு ஏற்கனவே 167 மில்லியன் டாலர் அபராதம் அமெரிக்க நீதிமன்றம் விதித்திருந்தது. என்.எஸ்.ஓ. நிறுவனத்துக்கு தடை விதித்து அபராதத்தை 4 மில்லியன் டாலராக அமெரிக்க நீதிமன்றம் குறைத்தது .
Advertisement
Advertisement