பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி 3 தினங்களுக்கு மதுபான கடைகள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி 3 தினங்களுக்கு மதுபான கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் 28 29 30 ஆகிய மூன்று தினங்கள் மூடப்படும். 3 நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் மற்றும் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சியினை முன்னிட்டு பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கினைப் பாதுகாக்கும் பொருட்டு 28.10.2025 29.10.2025 மற்றும் 30.10.2025 (செவ்வாய்கிழமை, புதன்கிழமை, மற்றும் வியாழக்கிழமை) ஆகிய மூன்று தினங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், எப்.எஸ்.2, எட்டால்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் பொருட்டு அக்டோபர் 28.10.2025, 29.10.2025 மற்றும் 30.10.2025 (செவ்வாய்கிழமை, புதன்கிழமை, மற்றும் வியாழக்கிழமை) ஆகிய மூன்று நாட்கள் முழுமையாக மூடி வைத்திட ஆணையிடப்படுகிறது.
மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிப்ரஸ்ஜித் சிங்காலோள்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.