சிறுவனுக்கு பாலியல் ெதால்லை போக்சோவில் போதகர் கைது
நாகர்கோவில்: குமரி மாவட்டம் தக்கலை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (55). மத போதகர். கிறிஸ்தவ சபை நடத்தி வந்தார். இந்த சபையில் வேதாகம வகுப்புகளும் விடுமுறை நாட்களில் நடத்துவார். சிறுவர், சிறுமிகள் பலர் இந்த வேதாகம வகுப்புக்கு வந்து செல்வார்கள்.
இவ்வாறு வந்த 17 வயது சிறுவனுக்கு போதகர் வர்கீஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுவனின் பெற்றோர் போதகரை கண்டித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுவன் மூலம் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ வழக்கு பதிந்து போதகர் வர்கீசை கைது செய்தனர்.