பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேல் ஒப்புதல்
Advertisement
டெல்லி: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க காவல்துறை முன்னாள் அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்புதல் அளித்துள்ளார். பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால் புதுப்பித்தபின் ஒப்படைப்பதாக பொன்.மாணிக்கவேல் உறுதி அளித்துள்ளார். சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் ஜாமீனை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. சிலைக் கடத்தல் வழக்கு குறித்து ஊடகங்களிடம் பொன்.மாணிக்கவேல் பேசக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் பொன்.மாணிக்கவேல் பேசமாட்டார் என்றும் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. பொன்.மாணிக்கவேல் குறித்து ஊடகங்களிடம் விசாரணை அதிகாரியும் பேசக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement