பாஸ்போர்ட்களில் இரு பாலினத்தை மட்டுமே குறிப்பிட வழிவகுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!
வாஷிங்டன்: பாஸ்போர்ட்களில் இரு பாலினத்தை மட்டுமே குறிப்பிட வழிவகுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அதிபர் டொனல்டு டிரம்பின் நிர்வாகத்துக்கு பாஸ்போர்ட் பாலின அடையாளங்களை ஆண் அல்லது பெண் என்று மட்டுமே கட்டுப்படுத்தும் கொள்கையை அமல்படுத்த அனுமதித்தது. கீழ் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றியமைத்து திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கூர்மையான விவாதத்தை இது தூண்டி இருக்கிறது.
இந்த தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தை அந்த கொள்கையை தொடர அனுமதிக்கும் அதேவேளையில், அதனை எதிர்த்து வழக்கு தொடரவும் அனுமதி அளிக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பாலின அடையாளத்துடன் ஒத்துப்போக பாஸ்போர்ட்களில் M, F அல்லது X-ஐ தேர்வு செய்ய அனுமதிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட்டு கீழ் நீதிமன்ற உத்தரவை இது நிறுத்துகிறது. பிறப்பு சான்றிதழ் மற்றும் Biological classification ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்கா ஆண் மற்றும் பெண் இரு பாலினங்களை அங்கீகரிக்கும் என்று ஜனவரி மாதம் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவில் இருந்து பாஸ்போர்ட் கொள்கை உருவானது. இனி அமெரிக்க பாஸ்போர்ட்களில் ஆண் அல்லது பெண் என மட்டுமே குறிப்பிட முடியும். பிறக்கும் போது பதிவான பாலினத்தை மட்டுமே அங்கீகரிக்கும் நிர்வாக உத்தரவுக்கு தடை விதிக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தததால் திருநங்கைகள் மற்றும் பிற பாலினத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.