தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தென்மாவட்ட பயணிகளின் ‘தண்டவாள தேர்’ வைகை எக்ஸ்பிரஸ்க்கு வயது 48: கேக் வெட்டி பயணிகள் உற்சாகம்

மதுரை: மதுரையிலிருந்து சென்னைக்கு தினமும் காலையில் வைகை எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இதன் 48வது ஆண்டு இயக்க நாள் விழா மதுரை ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 15.8.1977ல் மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் இயங்கத் தொடங்கியது. காலை நேரத்தில் சென்னைக்கு இந்த ரயில் இயக்கப்பட்டதால் இடையில் உள்ள திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்மாவட்ட பயணிகளுக்கான தண்டவாள தேர் என்றும் குறிப்பிடுவதுண்டு. மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு, பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை சென்றடையும். அதாவது 7.30 மணி நேரத்தில் சென்னையை சென்றடைகிறது. அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்துசேர்கிறது.

இரு மார்க்கத்திலும் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில் என்பதால், தென்மாவட்ட பயணிகளுக்கு வைகை எக்ஸ்பிரஸ் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. முன்பு பயண நேரம் 7.50 மணி நேரமாக இருந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிட நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

48வது ஆண்டு இயக்கநாளையொட்டி நேற்று மதுரை ரயில் நிலைய சந்திப்பின் 4வது நடைமேடையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் முன்பாக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ரயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இன்ஜின் முன் நின்று கேக் வெட்டி கொண்டாடினர். லோகோ பைலட்கள் மற்றும் பணியாளர்கள், பணிபுரிந்த தொழில்நுட்ப பணியாளர்கள், ரயில்வே ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ரயில் முன் நின்று புகைப்படம், செல்பி எடுத்துக்கொண்டனர்.

 

Related News