ரூ.3,000 செலுத்தி வருடாந்திர பாஸ் சுங்கச்சாவடிகளில் 200 முறை கட்டணமில்லாமல் பயணம்: நாடு முழுவதும் இன்று முதல் அமல்
விராலிமலை: இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் குத்தகைக்கு விட்டு கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் வரை 1051 சுங்க சாவடிகள் இருந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச் சாவடிகள் உள்ளன.
(ஆகஸ்ட் மாதம் வரை கணக்கில் கொண்டால் எண்ணிக்கை மாறக்கூடும்) இதில் ஆண்டுக்கொரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலிக்கிறது.(5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை) ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதம், 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 2023-24ம் ஆண்டு கணக்கின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் ரூ. 55 ஆயிரத்து 844 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாகவும், இது கடந்த 2022ம் ஆண்டு வசூலோடு ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடாக விராலிமலை பகுதி வாகன ஓட்டிகள் கூறும்போது, கட்டண குறைப்பு என்பதை கைவிட்ட ஒன்றிய அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள திட்டம் தான். வருடம் ஒரு முறை ரூ.3 ஆயிரம் செலுத்தி 200 முறை சுங்கச்சாவடிகளை கட்டணமில்லாமல் கடக்கலாம் என்பது.
இதிலும் முழுமையாக தொகையை அள்ள உள்ளது. ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம். வாகன உரிமையாளர்களை பொருத்தவரை ஒரு வருடம் கட்டணம் இல்லாத பயணத்தை தொடரலாம் என்று ஆர்வத்தில் ரூ.3 ஆயிரம் செலுத்திவிடுவார்கள். ஆனால் பயணம் என்பதோ சராசரி நாட்களை விட குறைவாகவே பெரும்பாலோருக்கு இருக்கும். அதிலும் ஒரு சிலர் கட்டணமில்லாத பாஸ் இருக்கிறது என்ற எண்ணத்தில் எளிதாக முடிக்க வேண்டிய பணியை வாகன தேய்மானம்.
எரிபொருளை கணக்கில் கொள்ளாமல் வாகனத்தில் சென்று முடிப்பார்கள் அதனால் கூடுதல் செலவினத்தை வாகன உரிமையாளர்கள் சந்திப்பார்கள். எனவே தான் கூறுகிறோம் இந்த திட்டத்திலும் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பெருமளவு வருவாயை ஈட்டும் என்று எது எப்படியோ வாகன ஓட்டிகள் எடுக்கும் முடிவில் தான் அனைத்தும் அமைந்துள்ளது என்றனர்
அந்த வகையில் இன்று முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ரூ.3 ஆயிரம் செலுத்தி தனியார் கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டும் வருடாந்திர பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று சுங்கச்சாவடிகளுக்கு புதிய திட்டம் குறித்த சுற்றறிக்கையை ஆணையம் அனுப்பி உள்ளது.