கட்சி நிகழ்ச்சிக்கு அவர்கள்தான் பொறுப்பு: கனிமொழி
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை பெயர் மனதையும் உலுக்கிய மிக துயரமான நிகழ்வு. இது நிச்சயமாக மிகப்பெரிய அளவிலே நம் மனதில் இருந்து நீங்காத ஒரு கருப்பு தினமாக, வடுவாக மாறிவிட்டது.
Advertisement
இப்படிப்பட்ட ஒன்று நிச்சயமாக நிகழ்ந்திருக்கக் கூடாது. யாராக இருந்தாலும் கண்டிஷன் போடுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உள்ளது. பிரதமர் இந்தியாவில் எந்த இடத்திற்கு வந்தாலும் அரசு நிகழ்ச்சிக்கு போகும் போது அது அரசாங்க பொறுப்பு. ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு வரும்போது அந்த கட்சி தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement