தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமான்: சமூக வலைதளத்தில் குவியும் கண்டனங்கள்

 

Advertisement

சென்னை: கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமானுக்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழும்பி வருகின்றன. செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்றுமுன்தினம் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் கட்டியதாக யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது.

ஆனால் செஞ்சி கோட்டையை தமிழர் கோனேரிக்கோன் மன்னன் தான் கட்டினார் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீமான் பேசிக்கொண்டிருக்கும்போது,கூட்டத்தின் ஒரு பகுதியில் சிலர் தொடர்ந்து கூச்சலிட்டும், கோஷங்கள் எழுப்பியும் இடையூறு செய்தனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு கட்சி நிர்வாகிகள் பலமுறை எச்சரித்தும், குழப்பம் நீடித்தது.

இதனால் கடுப்பான சீமான், கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், திடீரென மேடையின் முன்பகுதிக்கு சென்று அங்கிருந்து கீழே பாய்ந்து குதித்தார். ஒரு நபரை தாக்க முயன்றார். இதில், அவரைத் தடுக்க முயன்ற கட்சி தொண்டரையும் அவர் அறைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவரை சமாதானப்படுத்தி மீண்டும் மேடைக்கு அழைத்துச் சென்றனர். பொதுக்கூட்ட மேடையில் ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு கோபத்தில் குதிப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு விதமான விமர்சனங்களையும், விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது.

ஒரு கூட்டத்தை அமைதியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது, கட்சியின் கட்டுப்பாட்டில் குறைபாடுகள் உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. அதே சமயம் சீமானின் இத்தகைய ஆவேசமான நடவடிக்கைகள், அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளால் அடிக்கடி பொதுக்கூட்டங்களில் பதற்றமான சூழல் உருவாகி, அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

Advertisement

Related News