ஜாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்பது கட்டாயமில்லை
பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பில் மக்கள் பங்கேற்பது கட்டாயமில்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் செப்டம்பர் 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கான உத்தரவை ஆகஸ்ட் 13ல் காங்கிரஸ் அரசு பிறப்பித்தது. இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு உத்தரவை எதிர்த்து கர்நாடக பிராமண சபா, ஒக்கலிகர் சங்கம் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்தனர். மக்கள் தாமாக முன்வந்து கணக்கெடுப்பில் பங்கேற்கலாம்; மக்களை வற்புறுத்தக் கூடாது என கர்நாடக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement