பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது
Advertisement
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவில் தீவிரப்படுத்த பட்டுள்ளது. போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று கூடியது. தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Advertisement