நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிகழ்வுகள்!
1. தூத்துக்குடி-மும்பைக்கு புதிய ரயில் எப்போது? - திமுக துணைப் பொதுசெயளாலர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி
தூத்துக்குடிக்கும் மும்பைக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட ரயில்வே இணைப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த தேவை இருப்பதை ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா என்றும் இதன் அடிப்படையில் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரசை (ரயில் எண். 11043/11044) தூத்துக்குடிக்கு நீட்டிப்பதன் மூலமோ அல்லது புதிய நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலமோ இத்தேவையை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைந்திருக்கிறதா? என்றும் திமுக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு கால நிர்ணயம் ஏதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா, தூத்துக்குடிக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த வேறு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை கனிமொழி கருணாநிதி எம்பி எழுப்பினார்.
2. ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவைகள்: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கோரிக்கை
பாம்பனில் கடலில் ஒரு புதிய லிப்ட் பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்கள் மற்றும் கூடுதல் சேவைகளை இயக்க வேண்டும் என திருப்பெரும்புதூர் திமுக மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேசமயம் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக புதிய பாம்பன் லிப்ட் பாலம் பல நாட்களாக செயல்படாமல் உள்ளது என்பதை குறிப்பிட்டு அதை விரைவில் சரி செய்யவும், அதன் கீழ் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக எப்போது மீண்டும் செயல்படும்? அதற்கான காலக்கெடுவின் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
3. தமிழ்நாட்டிற்கான கல்வி உரிமை நிதி திருப்பிச் செலுத்தும் தொகை விடுவிக்காதது ஏன்? - திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா கேள்வி
2019 முதல் 2021 வரையிலான நிதியாண்டுகளுக்கான கல்வி உரிமை (ஸிஜிணி) திருப்பிச் செலுத்தும் நிதியை தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுவிக்காமல் இருப்பது குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர், தொடர்ந்து தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களையும் கேட்டுள்ளார். சமக்ர சிக்ஷா அபியானில் இருந்து ஸிஜிணி திருப்பிச் செலுத்தும் நிதிமுறையை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டிய அவர், தேசிய கல்விக் கொள்கைகளை ஏற்க மறுத்த மாநிலங்களுக்கு ஸிஜிணி திருப்பிச் செலுத்துதல்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்து தெளிவான கொள்கையை ஒன்றிய அமைச்சகம் வெளியிடவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
4. இயற்கை பேரிடர்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள்: அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜகத்ராட்சகன் கேள்வி
புயல், மழை, பூகம்பம், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் பேரழிவை முன்னறிவிப்பதற்காக அரசாங்கம் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
புயல்கள் மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் மாநிலங்களில் முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த ஒன்றிய அரசு இதுவரையில் ஏற்படுத்தியுள்ள நடவடிக்கைகள்பற்றிய விவரங்கள் என்ன? மற்றும் மழை, பூகம்பம், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கான கடந்த ஐந்து ஆண்டுகளின் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் மூலம் தடுக்கப்பட்டதைக் காட்டும் தரவு அரசாங்கத்திடம் உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
5. சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு: பொள்ளாச்சி திமுக எம். பி. ஈஸ்வரசாமி கோரிக்கை
தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மையம் (ழிசிசிசி) பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தும் திட்டங்களின் விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறூப்பினர் கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ழிசிசிசி க்காக ஒதுக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட தொகை எவ்வளவு? காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சைபர் குற்ற விழிப்புணர்வு பட்டறைகளின் எண்ணிக்கை என்ன? மற்றும் நாட்டின் சைபர் குற்றங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பைக் கையாள்வதில் பல்வேறு நிறுவனங்களிடையே முறையான ஒருங்கிணைப்பு உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
6. திறன் இந்தியா திட்டம் தோல்வி: திமுக எம்.பி. கே. ஆர். என். ராஜேஷ்குமார் கண்டனம்
ஒன்றிய அரசின் திறன் இந்தியா திட்டம் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறியதை சுட்டிக்காட்டி திமுக எம்.பி. கே. ஆர். என். ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
திறன் இந்தியா திட்டம் தோல்வியுற்றதற்கான காரணங்கள் என்ன? லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது ஆனால் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு அளிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்களை வழங்குவதில் முறையான பயிற்சி உள்கட்டமைப்பை அரசாங்கம் உறுதி செய்யாததற்கான காரணங்கள் என்ன மற்றும் பயிற்சி பெற்ற நபர்கள் வேலைவாய்ப்பு பெறத் தகுதியானவர்களாகவும், நல்ல வேலைகளைப் பெறவும் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
7. வேளாண்மை கடன் சங்கங்களின் பற்றாக்குறை ஏன்? - திமுக எம்.பி. எம். எம். அப்துல்லா கேள்வி
கிராமப்புறப் பொருளாதாரத்தின் குறுகிய மற்றும் நடுத்தர கால கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய முதன்மை வேளாண்மை கடன் சங்கங்களின் (றிகிசிஷி-கள்) வளங்கள் போதுமானதாக இல்லை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம். எம். அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? திறமையான செயல்பாடுகள் மற்றும் முடிவெடுப்பதற்காக கூட்டுறவுகளில் தொழில்முறை மேலாண்மை கட்டமைப்புகளை மேம்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன மற்றும் கூட்டுறவு நிறுவனம் இல்லாத பஞ்சாயத்துகளில் றிகிசிஷி-களை நிறுவ அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
8. பயணிகள் ரயில் கட்டண உயர்வு: திமுக எம்.பி.க்கள் சி என் அண்ணாதுரை, செல்வம், முரசோலி கண்டனம்
ஜூலை 1, 2025 முதல் பயணிகள் ரயிலில் ஏசி பெட்டிகளுக்கான கட்டணங்கள் உயர்ந்துள்ளதை கண்டித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் சி என் அண்ணாதுரை, ஜி. செல்வம் மற்றும் ச. முரசோலி ஆகியோர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கட்டண உயர்வால் மெயில்/எக்ஸ்பிரஸ், பயணிகள், சூப்பர்ஃபாஸ்ட், வந்தே பாரத் போன்ற ரயில்களின் ஸ்லீப்பர், ஏசி, ஜெனரல் என அனைத்து வகுப்புகளும் பாதிக்கப்படும், மேலும் முன்மொழியப்பட்ட கட்டண உயர்வு காரணமாக, நீண்ட தூர மற்றும் புறநகர் அல்லாத வழித்தடங்களில், குறைந்த/நடுத்தர வருமானம் கொண்ட குழு மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளின் அன்றாட பயணிகள் மீது ஏற்படக்கூடிய நிதிச் சுமையை ஒன்றிய அரசு உணரவேண்டும், குறைந்த வருமானம் கொண்ட பயணிகள், ணிகீஷி, மூத்த குடிமக்கள் மற்றும் அத்தியாவசிய பயண வகைகளுக்கான சலுகைகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளார்கள்.
அதேபோல் அதிகரித்து வரும் கட்டணங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தூரத்தின் விவரங்கள் மற்றும் சமீபத்திய கட்டண உயர்வின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் வருவாய் அதிகரிப்பு எவ்வளவு? வருவாய் உருவாக்கத்துடன் சுலுகைகளையும் வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்ன? என்றும் கேட்டுள்ளனர்.
வெவ்வேறு வகுப்புகளுக்கான கட்டண உயர்வுகளை முடிவு செய்வதற்கு முன் ஏதேனும் பொது ஆலோசனையை ஒன்றிய அரசு கேட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய திமுக மக்களவை உறுப்பினர்கள், அதற்கான விவரங்களை வெளியிட கோரியுள்ளனர். புறநகர் ரயில் சேவைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் மற்றும் வண்டிகளை அதிகப்படுத்தவும் அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் மற்றும் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டுள்ளனர்.
9. நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள். முடிப்பதற்கான கால அவகாசம் என்ன? - தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த நிலம் கையகப்படுத்தும் செயல்முறைக்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்குகிறதா என்று நாடாளுமன்றத்தில் திமுக தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
அதில் அவர், ழிபிகிமி மற்றும் பிற அரசுத் துறைகள் வழங்கும் விலையுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் நிர்ணயித்த சராசரி விலையின் விவரங்கள் என்ன? தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மற்றும் நடந்து வரும் ரயில்வே திட்டங்களுக்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்கியுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் என்ன? என்றும் கேட்டுள்ளார்.
10. தொடரும் இரயில் விபத்துகள். நடவடிக்கை என்ன? - சேலம் திமுக எம்.பி. செல்வகணபதி கேள்வி
காலியாக உள்ள கெசட்டட் அல்லாத பதவிகளுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே முடிவு எடுத்துள்ளது குறித்து திமுக மக்களவை உறுப்பினர் செல்வகணபதி நாடாளுமன்றத்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு அவர்களை ஒப்பந்த அடிப்படையில் தன்னார்வலர்களாக நியமிக்க அதிகாரம் உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? ரயில்வேயில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட காலியாக உள்ள பதவிகவிளை நிரப்ப இந்த முறை பின்பற்றப்படுவது பற்றிய விவரங்கள் என்ன?
கடந்த சில ஆண்டுகளில் நடந்த அனைத்து ரயில் விபத்துகளுக்கும் பணியாளர் பற்றாக்குறையால் ஏற்பட்ட மனித தவறு முக்கிய காரணமாக இருந்தது. இது தொடர்பாக ரயில்வே எடுத்த திருத்த நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
11. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த வேண்டும்: வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கோரிக்கை
பேரிடர் காலங்களில் துரிதமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட உதவும் வகையில் ஒன்றிய அரசு ஏதேனும் மேம்பட்ட தொழில்நுட்பம் அல்லது பருவமழை முன்னறிவிப்பு மாதிரிகளை நடைமுறைப்படுத்தியுள்ளதா என்று திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த கேள்வி எழுப்பினார்.
அதில் அவர், கடலோர வெள்ளப் பாதுகாப்புகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் என்ன? நில அதிர்வு கண்காணிப்பு வலையமைப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் மீள்தன்மையில் அவற்றின் தாக்கம் என்ன? என்று கேட்டுள்ளார்.
சாதாரண மக்கள், குறிப்பாக விவசாயிகள், பருவமழை உள்ளிட்ட வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கைகளை சரியான நேரத்தில் பெறுவதற்கு ஒன்றிய அரசு செய்துள்ள வசதிகள் என்ன? வறட்சியிலிருந்து மக்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் உள்ளூரில் மேம்பட்ட வானிலை நிலையங்களை நிறுவுவதற்கான காலக்கெடு என்ன? என்றும் அவர் தனது நாடாளுமன்ற கேள்விகளில் குறிப்பிட்டுள்ளார்.
12. இரண்டாவது சந்திப்பாக மாறுகிறதா போத்தனூர் ரயில் நிலையம்? - கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் கேள்வி
போத்தனூர் ரயில் நிலையம் கோயம்புத்தூரின் இரண்டாவது சந்திப்பாக மாற்றப்படும் என்று ஒன்றிய அரசு கூறியிருந்ததை அடுத்து அது எப்போது மாற்றப்பட்டும் என நாடாளுமன்றத்தில் கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் கோட்டத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் போத்தனூர் ரயில் நிலையம் உட்பட அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளின் நிலை என்ன? மேற்படி நிலையத்தில் பல்வேறு மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு? பணிகள் நிறைவடைய தேவைப்படும் கால அவகாசம் என்ன? என்று பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
13. தென்காசி – கொல்லம் பாதையில் எப்போது மீண்டும் நேரடி ரயில் சேவை தொடக்கம்? - தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் கேள்வி
2018 ஆம் ஆண்டில் ரயில் பாதை மாற்றம் முடிந்த போதிலும், திருநெல்வேலி-பாவூர்சத்திரம்-தென்காசி-கொல்லம் பாதையில் நேரடி பயணிகள் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து ஒன்றிய அரசிடம் நாடாளுமன்றத்தில் தென்காசி திமுக மக்களவை உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாமத்திற்கான காரணம் என்ன என்று கேட்டிருக்கும் அவர், அன்றாடம் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க இந்த ரயில் சேவைகளை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர்கள் எழுப்பும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், ரயில் சேவைகளை சரியான நேரத்தில் மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? அவர் கேட்டுள்ளார்.