நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மோடிக்கு காங்கிரஸ் அழுத்தம்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில் 5 விமானங்கள் சுடப்பட்டதா?: டிரம்ப் கிளப்பிய புதிய குண்டால் சர்ச்சை
மேலும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் வேண்டுமானால், உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து, இரு நாடுகளுக்கு இடையிலான போரை தடுத்ததாக கூறினார். ஆனால் அமெரிக்க அதிபரின் இந்த கூற்றை ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இவ்விசயத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தை மீண்டும் கிளறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது குறைந்தபட்சம் ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்; வர்த்தக ஒப்பந்த நிபந்தனையால்தான் இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தேன்’ என்று அவர் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த புதிய தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், டிரம்பின் இந்தப் புதிய ‘குண்டு’ இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. டிரம்பின் இந்தப் பேச்சுக்குக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியை நேரடியாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘ஹவ்டி மோடி, நமஸ்தே டிரம்ப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் டிரம்ப்புடன் பல ஆண்டுகளாக நட்புறவையும், அணைப்பையும் பேணி வரும் பிரதமர் மோடி, இப்போது இந்த விவகாரம் குறித்து மவுனம் காக்கக் கூடாது. கடந்த 70 நாட்களாக டிரம்ப் கூறிவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தாமாக முன்வந்து தெளிவான மற்றும் உறுதியான விளக்கத்தை அளிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.