நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கம்
ஆனால் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் மோடி விளக்கம் தர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதே போல், மாநிலங்களவையில் கீழடி ஆய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதில் ஒன்றிய பாஜக அரசு தாமதம் செய்வது குறித்து விவாதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா கோரினார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் மறுத்துவிட்டார். இதனால் அவையில் குழப்பம் நிலவியது. இதனிடையே அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.