தடைக்காலம் முடிந்த முதல் நாளில் பரிதாபம் மண்டபம் கடலில் படகு மூழ்கி 2 மீனவர்கள் பலி: இருவர் உயிருடன் மீட்பு; ஒருவர் மாயம்
Advertisement
நேற்று காலை மண்டபம் சேது நகரைச் சேர்ந்த சுதர்சன் விசைப்படகில் பரக்கத்துல்லா, கலீல் முகம்மது, முகம்மது ஹனீபா, பிரசாத், ஆரோக்கியம் ஆகிய 5 மீனவர்கள் சென்றனர். கடல் கரையிலிருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது கடல் நீர் படகில் நிரம்பி படகு மூழ்கியது. அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் முஹமது ஹனீபா, பிரசாத் ஆகியோரை மீட்டனர்.
பரக்கத்துல்லா, கலீல் ரஹ்மான், ஆரோக்கியம் ஆகியோரை மீட்க முடியவில்லை. மண்டபம் கடலோர பாதுகாப்பு படையினர் மாயமான மூன்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மீனவர் ஆரோக்கியம், பரக்கத்துல்லா உடல்களை கடலோர காவல் படை அதிகாரிகள் மீட்டனர். மாயமான மீனவர் கலீல் ரஹ்மானை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
Advertisement