பறிபோனது பதக்க கனவு..! பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரி வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
இறுதிப்போட்டி தொடங்கும் முன்பு அவரது எடை 100 கிராம் அதிகம் காணப்பட்டதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உடைந்து போன வினேஷ் போகத் உரிய எடையுடன் இறுதிப் போட்டி வரை சென்ற தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வினேஷ் போகத் தரப்பில் காணொளி வாயிலாக இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்குவது 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரி வினேஷ் போகட் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகட்டின் வழக்கை சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.