பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு
அதன்படி, சென்னை பாரிமுனையில் கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலை கந்தகோட்டம் முருகன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் உள்ளே மூலவர், உற்சவர், அம்மன் சன்னதிகள் உள்ளன. மேலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி, சித்திபுத்தி விநாயகர், சரவணப் பொய்கை, பஞ்சபூத தீர்த்தம், சப்தகன்னிகள் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் நாளை காலை 10.15 மணிக்குமேல் 11.15 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதற்காக கோபுரத்தில் பஞ்சவர்ணம் பூசப்பட்டு தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பேரி செட்டியார் சமூகம் சார்பிலும், கோயில் செயல் அலுவலர் சிவக்குமார், அறங்காவலர் குழுத்தலைவர் அசோக் குமார், அறங்காவலரகள் செந்தில், கந்தசுவாமி, நந்தகுமார், சுரேஷ் குமார் சார்பிலும் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர் தாயநிதிமாறன், ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.