பாம்பன் புதிய பாலத்தில் அக்.1ம் தேதி முதல் ரயில் சேவை துவக்கம்
Advertisement
தற்போது பாம்பன் புதிய ரயில் பாலப்பணிகள் முடிவடைய உள்ளதால் வரும் அக்.1ம் தேதி முதல் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். புதிய ரயில் பாலத்தில் 10 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்படும். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement