தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணி மேற்கொள்ளக் கூடாது : ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை: சதுப்பு நிலமான பள்ளிக்கரணை பெரும்பாக்கத்தில் பிரிகேட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரியும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ப்ரஸ்நெவ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

Advertisement

அதில், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிக்கு சட்ட விரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலத்தில் தனது அதிகார எல்லையை மீறி தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ''கட்டப்படும் கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. சதுப்பு நிலத்தில் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வு 2 வாரத்தில் முடிவடையும்'' என வாதங்கள் முன் வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட் நீதிபதிகள், "சுப்ரீம்கோர்ட், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகள் தெரியாமல் சிஎம்டிஏ கட்டுமானத்துக்கு அனுமதித்தது எப்படி?. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணி மேற்கொள்ளக் கூடாது. நவம்பர் 12ம் தேதிக்குள் தமிழக அரசு, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்," என உத்தரவிட்டனர்.

Advertisement