பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டம்: அமெரிக்கா தகவல்
வெஸ்ட் பாம் பீச்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கையின் முயற்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல்-போர் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் பிணைக் கைதிகளையும், பிணைக்கைதிகளின் சடலங்களையும் திருப்பி அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,\”பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் இரண்டு ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அதிபர் டிரம்ப் உருவாக்கிய ஒப்பந்தத்தின் நேரடி மற்றும் கடுமையான மீறலாகும். ஹமாஸ் இந்த தாக்குதலை தொடர்ந்தால் காசா மக்களை பாதுகாப்பதற்கும், போர் நிறுத்தத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்\” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
போர் நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளின்படி, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு காசாவின் ரபா நகரில் இஸ்ரேலிய வீரர்கள் மீது நேற்று ஹமாஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் பீரங்கிகள் அந்த பகுதியை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ரபாவில் நடந்த எந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது.