மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: சென்னை ஆயிரம்விளக்கில் இருக்ககூடிய அப்போலோ மருத்துவமனையில் நேற்று பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.
Advertisement
சிகிச்சையின் அடிப்படையில் முன்பாகவே அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு அஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள படவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தன் அடிப்படையில் இன்று அவருக்கு அஞ்சியோ சிகிச்சை என்பது மேற்கொள்ளபட்டு தற்போது அவர் நோர்மல் வார்டிற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டு அறிந்தார். விரைவில் பூரண குணமடைய அவரின் வாழ்த்தை தெரிவித்தார். அதேபோல காலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
Advertisement