பழனி தண்டாயுதபாணி சாமி கோயில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Advertisement
பழனி: பழனி தண்டாயுதபாணி சாமி கோயில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயில் பொறியாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. பழனி கோயிலில் உள்ள பொறியாளர் பிரிவில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடைபெறுகிறது.
Advertisement