தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்; நடவடிக்கை எடுத்தால் அனைவரும் கொல்லப்படுவர் என எச்சரிக்கை!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தப்பட்டுள்ளது. ரயிலில் சென்ற தீவிரவாத தடுப்புப் படை, உளவுத்துறை உள்ளிட்டோரும் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலைக் கடத்திய பலோச் விடுதலை படை. கடத்தலின்போது வெடித்த மோதலில் 6 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகளை விடுவித்து, 100க்கும் மேற்பட்டோருடன் ரயிலை கடத்தியுள்ளனர். ரயிலை மீட்க ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அனைவரும் கொல்லப்படுவர் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
Advertisement

பாகிஸ்தானில் பாதுகாப்படை படையினர் சென்ற ரயிலை கிளர்ச்சி குழு கடத்தியுள்ளது. 300 பயணிகளை விடுதலை செய்தபோதும், 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கிளர்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்படை வீரர்கள் 6 பேரை அவர்கள் சுட்டு கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு ரயில் சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்படை படையினர் பயணம் செய்தனா். அப்போது அந்த ரயிலை பலோச் விடுதலைப் படை (BLA) ஜாஃபர் எக்ஸ்பிரஸைக் கடத்தியுள்ளனர்.

ரயில் கடத்தல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பலோச் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலன் மாவட்டத்தின் மஷ்காப், தாதர் பகுதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட செயல்பாடு ஆகும். எங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், ரயில் பாதையை வெடி வைத்து தகர்த்து, ரயிலை நிறுத்தச் செய்தனர். 100 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். ராணுவ நடவடிக்கை எடுத்தால் அனைவரும் கொல்லப்படுவார்கள்" என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News