பாகிஸ்தான் துணை ராணுவப்படை தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: 3 வீரர்கள் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெஷாவர் பகுதியில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் படை தலைமையகத்தின் பிரதான வாயில் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இரண்டு இடங்களில் தற்கொலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன. ராணுவப் படை தலைமையக வளாகத்திற்குள் கடுமையான துப்பாக்கிச் சூடு தொடர்கிறது. பயங்கரவாதிகள் வளாகத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறுகிறது.
இந்த தாக்குதலில் 3 எஃப்சி வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானின் ஒரு பிரிவான ஜமாத்-உல்-அஹ்ரர், பெஷாவரில் உள்ள துணை ராணுவப் படைத் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதலை அதன் தற்கொலைப் பிரிவான "குல்பா-இ-ரஷீதீன் இஷ்திஷாதி கண்டக்" நடத்தியதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.