தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீர் விவகாரம்.. பாகிஸ்தான் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி பதில்!!

லண்டன்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் கடந்த 4ம் தேதி பிரிட்டன் புறப்பட்டு சென்றார். இங்கு 9ம் தேதி வரை அவர் இருப்பார். இந்த பயணத்தின்போது அயர்லாந்துக்கும் 2 நாள் சுற்றுப்பயணமாக ஜெய்சங்கர் செல்ல உள்ளார். லண்டனில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், நான் இப்போது ஜெய்சங்கரை கொஞ்சம் பதட்டப்பட வைக்கப்போகிறேன் எனக் கூறி காஷ்மீர் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
Advertisement

காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீர் மக்கள் ஆயுதம் ஏந்தி எதிர்த்து நிற்கின்றனர். காஷ்மீரில் 70 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த 10 லட்சம் ராணுவ வீரர்களை குவித்து இருக்கிறீர்கள். பிரதமர் மோடி தனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசி காஷ்மீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவாரா?'' என்று அந்த செய்தியாளர் கேள்வி கேட்டார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர்; காஷ்மீர் பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்படியாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி உள்ளது. 2-வது நடவடிக்கையாக காஷ்மீரின் வளர்ச்சி, பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூக நீதியை மீட்டெடுத்துள்ளது. 3-வது நடவடிக்கையாக அதிக ஓட்டு பதிவாகும் வகையில் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இன்னும் ஒரே ஒரு விவகாரம் மட்டும்தான் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த பிரச்சினை இப்போது இந்தியாவுக்கு வெளியே உள்ளது. அதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்னும் திருடப்பட்ட காஷ்மீர். அதை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடும் என உங்களிடம் உறுதி அளிக்கிறேன் என்று ஜெய்சங்கர் அதிரடியாக கூறினார்.

Advertisement

Related News