சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம்!
Advertisement
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி பொதுவான ஒரு இடத்தில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஏற்றுக் கொண்டால் ஹைபிரிட் முறையில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரசியல் சூழல் காரணமாக பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மறுத்த நிலையில் ஹைபிரிட் முறையில் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement