பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி.20 போட்டி: 55 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி
ராவல்பிண்டி: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.இதில் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்ததாக 3 போட்டி கொண்ட டி.20தொடரின் முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 60(40 பந்து), ஜார்ஜ் லிண்டே 36, டோனி டி சோர்ஸி 33 ரன் அடித்தனர். பாகிஸ்தான் பவுலிங்கில் முகமது நவாஸ் 3, சைம் அயூப் 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் 37, முகமது நவாஸ் 36, சாஹிப்சாதா ஃபர்ஹான் 24 ரன் எடுத்தார். பாபர் அசாம் டக்அவுட் ஆக கேப்டன் சல்மான் ஆகா 2ரன்னில் நடையை கட்டினார். 18.1ஓவரில் 139 ரன்னுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இதனால்55 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் கார்பின் போஷ் 4, ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட் எடுத்தனர். ஜார்ஜ் லிண்டே ஆட்டநாயகன் விருதுபெற்றார். 2வது போட்டி லாகூரில் வரும் 31ம் தேதி நடக்கிறது.