தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரு நாடுகளிடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்; பாகிஸ்தானின் அணுஆயுதம் இனி சவுதிக்கும் சொந்தம்: மத்திய கிழக்கு அரசியலில் திருப்பம்; இந்தியாவுக்கு நெருக்கடி

ரியாத்: சவுதி அரேபியாவுக்கு தேவைப்பட்டால் தனது அணு ஆயுதங்களை வழங்கத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது மட்டுமின்றி இந்தியாவுக்கும் மறைமுக நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே நெருங்கிய ராணுவ உறவு இருந்து வருகிறது. சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ உதவிகளை வழங்கி வந்ததும், பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்திற்கு சவுதி அரேபியா நிதியுதவி செய்ததாகவும் நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

Advertisement

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சவுதி பயணத்தின்போது இந்த ‘வியூகமிக்க பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்’ கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ‘ஒரு நாட்டின் மீதான தாக்குதல், இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்’ என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி தேவைப்பட்டால் சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறன் பயன்படுத்தப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது, இந்த ஒப்பந்தத்திற்கு அணு ஆயுதப் பரிமாணத்தையும் அளித்துள்ளது. கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. ஈரான், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைக்கவும் சவுதி அரேபியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம், பாகிஸ்தான் மத்திய கிழக்கில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்துவதோடு, சவுதியிடமிருந்து நிதி உதவியையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்குப் பெரும் பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை, ‘தேசிய பாதுகாப்பில் இதன் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்’ கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் போன்ற இந்தியாவின் திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்றும், இந்தியாவை இஸ்ரேலுடன் இன்னும் நெருக்கமாகச் செயல்படத் தூண்டும் என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தான் அமைச்சரின் வெளிப்படையான அறிவிப்பு, சர்வதேச அளவிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த ஒப்பந்தம் குறித்து ஆரம்பத்தில் பாகிஸ்தான் தரப்பில், ‘அணு ஆயுதப் பயன்பாடு இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் அல்ல’ என்று கூறப்பட்டது.

ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ‘எங்களிடம் உள்ள அணு ஆயுதத் திறன், இந்த ஒப்பந்தத்தின்படி சவுதி அரேபியாவுக்குத் தேவைப்படும்போது வழங்கப்படும்’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் தனது அணு ஆயுதக் குடையை சவுதி அரேபியாவுக்கும் விரிவுபடுத்தத் தயாராக உள்ளது என்பதை முதல் முறையாக இந்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது. கத்தாரில் இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், அமெரிக்காவை ஒரு பாதுகாப்பு அரணாக நம்பியிருப்பதைக் குறைக்கவும் சவுதி அரேபியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம், பாகிஸ்தான் மத்திய கிழக்கில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்துவதோடு, சவுதியிடமிருந்து பொருளாதார உதவியையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டம் இந்தியாவுக்கு எதிராக மட்டுமே ஆனது என பாகிஸ்தான் கூறிவந்தாலும், அந்நாட்டின் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்திற்கு அதன் ஆரம்ப காலங்களில் சவுதி அரேபியா பெருமளவில் நிதியுதவி செய்தது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் பாதுகாப்பு அரண் மீதான நம்பிக்கைக் குறைவை வளைகுடா நாடுகள் மத்தியில் காட்டுவதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். அதே சமயம், இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் தடைபட்டுள்ள சூழலில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது மத்திய கிழக்கு அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

அப்ப இருந்த உலகம் இப்ப இல்லை

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே பாயும் நதிகளின் நீர் பங்கீடு முறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை இந்தியா மீறுவதாக பாகிஸ்தான் தொடர்ந்து சர்வதேச அரங்குகளில் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் மீண்டும் இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்பியபோது, அதற்கு இந்தியா மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அனுபமா சிங் இதுகுறித்து பேசுகையில், ‘1960ம் ஆண்டில் இருந்த உலகம் இன்றில்லை. இன்றைய புவிசார் அரசியல் சூழலும், சவால்களும் முற்றிலும் மாறுபட்டவை. பயங்கரவாதத்தின் அடிப்படையில் அல்ல; நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீடித்த ஒத்துழைப்பு சாத்தியமாகும்.

மேலும், பாகிஸ்தானின் தொடர்ச்சியான அரசு ஆதரவு பயங்கரவாதம், நதி நீர் ஒப்பந்தங்களை மதித்து நடப்பதற்கான நம்பிக்கையான சூழலை முற்றிலும் சிதைத்துவிடுகிறது’ என்றார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதாக அவரது பேச்சு அமைந்தது. நீர் பங்கீடு போன்ற தொழில்நுட்ப விவகாரத்தை, பயங்கரவாதம் என்னும் பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் இந்தியா நேரடியாகத் தொடர்புபடுத்திப் பேசியிருப்பது, சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisement

Related News