தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கண்டிப்பாக பாகிஸ்தான் சென்று விளையாடுவோம்: குல்தீப் பேட்டியால் சர்ச்சை

மும்பை: இந்திய அணி கடைசியாக 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் தான் பங்கேற்றது. அதன் பிறகு 16 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில், ``ஒரு கிரிக்கெட் வீரராக நாங்கள் எங்கு அனுப்பினாலும் அங்கு சென்று விளையாடுவோம். நான் இதுவரை பாகிஸ்தானுக்கு சென்றதே கிடையாது. இதனால் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன். பாகிஸ்தான் மக்கள் மிகச்சிறந்தவர்கள்.
Advertisement

எப்போது எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது நாங்கள் கண்டிப்பாக அங்கு சென்று விளையாடுவோம்’’ என்றார். பிசிசிஐ தங்கள் அணி வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது இந்திய வீரர் ஒருவரே தாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மிகவும் ஆர்வமுடன் இருக்கிறோம் என்று கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது பிசிசிஐ எடுத்திருக்கும் முடிவுக்கு நேர்மாறான கருத்து என்பதால் குல்தீப் யாதவ்வை பிசிசிஐ கண்டிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தற்போது குல்தீப் யாதவின் இந்த கருத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் முறையிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் குல்தீப் யாதவுக்கு சிக்கல் உருவாகலாம்.

Advertisement

Related News