பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் : இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி
டெல்லி :பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்று அமெரிக்கா சென்றபோது பாகிஸ்தான் ராணுவத்தளபதியின் பேச்சுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அணுசக்தி மிரட்டல் விடுப்பது பாகிஸ்தானுக்கு பழக்கமான ஒன்று தான் என்றும் பாகிஸ்தானின் அணு ஆயுத கட்டுப்பாடு குறித்த நீண்டகால சந்தேகங்கள் இதன்மூலம் உறுதியாகி உள்ளது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.