பாக்.வெள்ளப்பெருக்கு பலி 344ஆக அதிகரிப்பு
பெஷாவர்: பாகிஸ்தானின் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலியானவர்கள் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் 279 பேர் இறந்ததாக முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை 344ஆக அதிகரித்துள்ளது. புனேர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் 184பேர் உயிரிழந்துள்ளனர். ஷாங்க்லா மாவட்டத்தில் 36 பேர், மன்சேராவில் 23 பேர், ஸ்வாட்டில் 22 பேர், பனெஜரில் 21 பேர், பட்டாகிராமில்15 பேர் லோயர்ட டிர் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வருகிற 21ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.