பாகிஸ்தானுடன் தொடர்பு அசாம் பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது
கவுகாத்தி: அசாமில் உள்ள சோனித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதிகா கலிதா. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற விவகாரத்தில் ஜோதிகா மற்றும் அவரது சகோதரர் உள்பட 4 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர் துபாய் சென்று பாகிஸ்தான் நாட்டுக்காரரை திருமணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஜோதிகாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார், அவர் தொடர்புடைய 17 வங்கிக் கணக்குகளை கண்டறிந்து முடக்கினர்.
இதில், பெரும் தொகை இருந்ததாக சொல்லப்படுகிறது. 44 ஏடிஎம் கார்டுகள் மற்றும் செக் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே போல் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு சியாங் மாவட்டத்தின் ஆலோவைச் சேர்ந்த ஹிலால் அகமது, சாங்லாங் மாவட்டத்தின் மியோவோவிலும் உளவு பார்த்தவரும் கைது செய்யப்பட்டனர்.