முத்தரப்பு டி.20 தொடர்; ஆப்கனை சுருட்டி வீசி பாகிஸ்தான் சாம்பியன்
சார்ஜா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி.20தொடர் சார்ஜாவில் நடந்துவந்தது. இதில் நேற்று நடந்த பைனலில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஃபகார் ஜமான் 27, முகமது நவாஸ் 25, கேப்டன் சல்மான் ஆகா 24 ரன் எடுத்தனர்.
Advertisement
ஆப்கன் பவுலிங்கில் கேப்டன் ரஷித்கான் 3 விக்கெட் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய ஆப்கன் அணியில் ரஷித்கான் 17, செடிகுல்லா அடல்13 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். 15.5 ஓவரில் 66 ரன்னுக்கு ஆப்கன் சுருண்டது. இதனால் 75 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் எடுத்த பாகிஸ்தானின் முகமது நவாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Advertisement