பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற 2ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி
அங்காரா: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற 2ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 'பாகிஸ்தானிய தாலிபான் குழு' ஆப்கானில் இயங்கி வருவதாக குற்றம்சாட்டி, பாக். ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது
ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் சமீப காலமாக பயங்காவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்காவில்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தானின் தலீபான்கள் இதனை மறுத்து வருகின்றனர். இதற்கிடையே தெஹ்ரிக் தான் பாகிஸ்தான் பயங்கரவாத தளபதியை அழிப்பதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது ஏவுகணை நாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதனை தொடர்ந்து கத்தாரில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்ட நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் கையெழுத்தானது. ஆனால் அதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் வான்தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து துருக்கில் நடைபெற்ற பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே 2ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.