பாக்.கிற்கு உளவு பார்த்ததாக டிஆர்டிஓ மேலாளர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், ஜெய்சல்மார் மாவட்டம், சந்தன் பகுதியில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகை உள்ளது. இதில் உத்தரகாண்ட்,அல்மோராவை சேர்ந்த மகேந்திர பிரசாத் மேலாளராக இருந்தார். விருந்தினர் மாளிகைக்கு வரும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு துறைக்கு ஐஎஸ்ஐக்கு பிரசாத் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து மகேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டார்.