பாக்.கில் என்கவுன்டரில் 9 தீவிரவாதிகள் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கைபர், டேங்க் மற்றும் லக்கி மார்வட் மாவட்டங்களில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினார்கள். டேங்க் பகுதியில் தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார். ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் 9தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement