பாக். டிரோன் அத்துமீறல்
Advertisement
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரவு 11.30 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்தது. இதனை பார்த்த வீரர்கள் உஷாராகி உடனடியாக டிரோன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
சுமார் 3 டஜன் சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து டிரோன் விழுந்த பகுதியில் நேற்று காலை வீரர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனிடையே அத்துமீறும் டிரோன்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.3லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.
Advertisement