தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சோகத்தின் வலி வெற்றியின் மகிழ்ச்சியை அழித்து விட்டது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

கர்நாடகா: சோகத்தின் வலி வெற்றியின் மகிழ்ச்சியை அழித்து விட்டது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். பெங்களூரில் துயரமான நிகழ்வு நடந்துள்ளது; இந்த விபத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். "மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் அரசு நிறைவேற்றும்.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பை வென்றுள்ளது. இதனையடுத்து, அந்த அணியின் ரசிகர்கள் பெரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடவும், தங்கள் மாநில அணியைப் பாராட்டவும் கர்நாடகா அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விழா பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெங்களூரு வந்தனர்.

அவர்களை அம்மாநிலத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விமான நிலையம் சென்று வரவேற்றார். பிறகு மைதானத்தில் ஆர்சிபி அணி வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடவும், வெற்றி விழாவில் பங்கேற்று வீரர்களைப் பாராட்டவும் லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் இன்று சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"சோகத்தின் வலி வெற்றியின் மகிழ்ச்சியை அழித்து விட்டது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நடந்திருக்க கூடாது. விதான் சவுதாவில் நடைபெற்ற நிகழ்வில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்வில்தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

RCB கிரிக்கெட் வீரர்களை வரவேற்க குவிந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி, 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி திவ்யான்ஷி உயிரிழந்தார். திவ்யான்ஷி தந்தை சிவகுமார் மற்றும் தாய் அஸ்வினியுடன் மைதானத்திற்கு வந்திருந்தார். நெரிசலின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தார் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் தான்.

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். மொத்தம் 47 பேர் காயமடைந்தனர். சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். காயமடைந்த 47 பேரின் உயிருக்கு எந்த ஆபத்தம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் உறவினர்களின் உணவு, போக்குவரத்து செலவை அரசே ஏற்கும்

2 முதல் 3 லட்சம் பேர் வரை குவிந்து விட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகமான கூட்டம்தான் விபத்து காரணம் என்று தெரிய வருகிறது. வெற்றி பேரணிக்கு திட்டமிட்டபோது அனைத்து அதிகாரிகளும் ஒப்புதல் அளித்தனர். விசாரணை அடிப்படியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 15 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை ஆணையத்துக்கு சித்தராமையா உத்தரவு அளித்துள்ளார்.

 

Related News