பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை என்கவுன்டர் செய்த அதிகாரிகள் உட்பட 1466 போலீசாருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சரின் திறன் விருது
புதுடெல்லி: கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுலைமான் என்ற ஆசிப், ஜிப்ரான், ஹம்ஸா ஆப்கானி ஆகியோர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மகாதேவ் என்று பாதுகாப்பு படையினர் பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்தாண்டுக்கான ஒன்றிய உள்துறை அமைச்சரின் திறன் விருதை அரசு நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில், ஆபரேஷன் மகாதேவ் என்கவுன்டரில் நேரடியாக ஈடுபட்ட 40 போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் அதிகாரிகள் உட்பட மொத்தம் 1466 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் ஐஜி வி.கே.பிர்தி,மூத்த எஸ்பி சந்தீப் சக்ரவர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஐஜி,மூத்த எஸ்பி மற்றும் ஒரு டிஐஜி , 2 எஸ்பிகள், 2 டிஎஸ்பி உள்ளிட்ட 40 அதிகாரிகளுக்கு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.